திருடு போனதேக்கு மரம் பொறி வைத்து பிடித்த காவல்துறை,

" alt="" aria-hidden="true" />


திருடு போனதேக்கு மரம்
பொறி வைத்து பிடித்த காவல்துறை,
     உத்தமபாளையம், அருகேயுள்ள
இராமசாமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற குப்புசாமி நாயுடு, இவருக்குச் சொந்தமான
தென்னந்தோப்பில் இவரது மகன் நாகராஜ் என்பவர்.கரையோரமாக
தேக்கு மரம் வைத்து வளர்த்து வந்துள்ளார், இதில் ஒரு மரத்தை கடந்த 15 நாட்களுக்கு முன் யாரோ மர்ம நபர்கள் வேரோடு மிஷின் வைத்து அறுத்துச் சென்று விட்டனர், மரம் திருடு போனதாகவும் மரத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் என்றும்
உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது, புகாரின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட காவல் துணைக்கண் காணிப் பாளர் சின்னக் கண்ணு
ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள், முனியம்மா, மற்றும்
ஜெயபாண்டி ஆகியோர்கள் தீவிர
விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனடிப்படையில் காவல்துறையினருக்கு கிடைத்த
தகவலின்படி, இராயப்பன்பட்டியை
சேர்ந்த ராமு மகன், போத்திராஜ்
என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர், அவர் அளித்த தகவலின்படி அறுவை செய்யப்பட்டதேக்கு மரப்பலகைகளையும் கைப்பற்றப்பட்டு மேற்கொண்டு
விசாரணை நடத்தி வருகிறார்கள்,
திருடு போன ஒரு லட்சம் மதிப்பிலான தேக்குமரத்தை விரைந்து
கண்டு பிடித்த காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப் பட்டன.